Friday, 14 February 2014

முத்தம் கவிதைகள் தொகுப்பு


இம்சையே!




ஆயிர‌ம் முறை சொன்னாலும்
அறிவே இல்லை உன‌க்கு என்று
முத்த‌மிடுகையிலெல்லாம்
யுத்த‌மிடுகின்றாய் என்னோடு
ச‌ளைக்காம‌ல் எச்சிலை அழித்து
ச‌த்த‌மில்லாம‌ல் இப்போதாவ‌திடு என்று
உன் க‌ன்ன‌ம் காட்டுகின்றாய்
இம்சையே!
ச‌த்த‌திற்காக‌ யுத்த‌மிடுகிறாயா?
முத்த‌திற்காக‌ ச‌த்த‌மிடுகிறாயா?

பொன் சங்கிலி




உன் இதழில் நனைந்தே
உருகிப்போன
பொன் சங்கிலியின்
புலம்பலை கேட்டதுமுதல்
புலம்பித் தவிக்கின்றது
என் இதழ்கள் – உன்னிடம்
உருகிப்போக!
முத்தமிட்டு..
முத்தமிட்டு…



முத்த மழை.....



சின்ன சின்ன
சண்டைகள்....

அது
நம்மிடம் இருந்து
நம் சிரிப்பினை
தொலைக்க செய்யும்....

சில நாட்கள்
பேசாமல் இருப்போம்

சில நாட்கள்
பார்க்காமல்
இருப்போம்....

ஒரு
வரட்டு
வைராக்கியத்தோடு.....

உனக்கும்
எனக்கும்
மட்டும் அறிந்த
செய்கை பாஷையில்
கேட்டேன்....
"மன்னித்து விடு......"

என்ன
அதிசயம்
உன் வறட்டு
வைராக்கியத்தில்
இத்தனை
முரட்டு காதலை
அடக்கி வைத்தாய் என்று....

முத்த மழை
பொழிந்தது.....
முகம் முழுக்க....

கண்ணீர மழை
பொழிந்தது
தன்னாலே....


சின்ன சின்ன 
சண்டைகள்....

சில நாட்கள்  
பேசாமல் இருப்போம் 

சில நாட்கள் 
பார்க்காமல் 
இருப்போம்....

ஆனால் 
உனக்கும் 
எனக்கும் தெரிய வில்லை 

நம் 
நிரந்தரமாய் 
பிரிவதற்கு 
பழகி கொண்டு 

இருக்கிறோம் என்று.....




---------------------------

முத்தம் என்பது
உதடுகளின் ஒப்பந்தம்
என்று தான் நினைத்திருந்தேன்.
உயிரின்
தீப்பந்தம் என்பது
இப்போது தானடி புரிகிறது.


---------------------------------------

No comments:

Post a Comment